காதல் பொம்மை

நீ என் இதயத்தில் அடித்த அடி வேண்டுமானால்

வெளியில் தெரியாமல் இருக்கலாம்

ஆனால் அந்த வேதனை வெளியில் தெரிகிறது என்

கண்களில் கண்ணீராய்

காதலை பொம்மையாக்கி என் கையில் தந்தாய்

நானும் குழந்தை போல் குதூகளித்தேன்

கொடுத்த நீயே இன்று பறித்துக்கொண்டு போகிறாய்

இன்றும் பொம்மையை இழந்த குழந்தையாய்

மௌனமாய் அழுகத்தான் முடிகிறது என்னால்

என்றேனும் திருப்பிதருவாய் என்ற நம்பிக்கையில்

கந்திருகிறேன் உன் காதல் பொம்மைக்காக .

எழுதியவர் : (25-May-13, 4:32 pm)
சேர்த்தது : Yasmeen
Tanglish : kaadhal pommai
பார்வை : 81

மேலே