காதல் பதிவேடு

பற்றானது -என் வாழ்கை
உன் வரவால் இன்று
கொள்முதல் செய்யபடுகின்றன
-உன் மீதான கற்பனைகள் அனைத்தும்
பெருக்கப்பட்ட உன் நினைவுகளோடு (*)
(-)கழிந்துபோன என் நிமிடங்களை பார்த்து
வகுத்துகொண்டேன் என் இரவுகளை (/)
(+) உன் நினைவுகளை கூட்டி கொள்வதற்காக
இடம் மாறிய என் இதய சொத்து
வராகடனாய் உன்னிடம் சென்றபோது
வருத்தப்படவில்லை என் மனது-ஆனால்
விற்பனை திருப்பமாய் அனுப்பிவிடாதே
அதை உன் இதயத்தோடு சேர்த்து
நிலை சொத்தாக பத்திரபடுத்திகொள்
-என் அன்பே !!