ஆழ்மனதிலிருந்து...??
வாழ்க்கைச் சதுரங்க நாடகத்தில்
நகரும் காயாக ஒவ்வொரு
இயற்கை வனப்பையும் சிதைத்து
சுற்றுச்சூழலை மாசாக்கி
ஆரோக்கியத்தைக் காசுக்கு
விற்று வாழ்க்கைச் சதுரங்கத்தை
வன்ம நீருக்குள் தள்ளுவதையும் ..
ஆற்றின் மணலை அள்ளி
கொள்ளை பாதகம் செய்தலையும்
நிறுத்திக்கொள்வதோடு ..
இதயவெம்மை இளைப்பாறி
அறிவுச் சித்திரம் அரங்கேறி
ஆனந்தவாழ்வு நிலைத்திட
கடல் மணலாவது இருக்கட்டுமென்ற
மனோபாவத்தை வன்மஇருளில் புதைந்த
ஆழ்மனதிலிருந்து மீட்டெடு..!!
-- நாகினி

