உன் பேச்சு! உன் மூச்சு! எனக்கான மருந்தாச்சு!

அழுகாச்சி எனதாச்சி!
பொழுதுக்கும் அழுதாச்சி!
பொழுதாகி விடுஞ்சாச்சி!
என் வாழ்வோ இருட்டாச்சி!

உன் பேச்சு! உன் மூச்சு!
எனக்கான மருந்தாச்சி!
அதநீயும் நெனைக்காம
முழுசாக மறந்தாச்சி!

நான்மறந்த சிரிப்பாச்சி!
அதநெனைச்சா வெறுப்பாச்சி!
நான்படுச்ச படிப்பாச்சி
எனப்பார்த்து சிரிச்சாச்சு!

மனசெல்லாம் வலியாச்சி!
அதுஇப்போ வாழ்வாச்சி!
எனக்கான அன்னக்கிளி
எனவிட்டு பறந்தாச்சி!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (30-May-13, 4:56 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 143

மேலே