கூடா காதல்

யார் சொல்லியும் கேட்கவில்லை நான்
உன் இருப்பிடம் நோக்கி சென்றேன்.

உன்னை தொட்டு தழுவும் போது
உலகத்தையே மறந்தேன்.

உன் இதழ் மீது என் இதழ் பதித்து
காதல் ரசம் பருகும் போது
என்னையே மறந்தேன்.

காதல் ரசத்தின் வீரியம் என் கல்லீரலில்
கண்ணீரை சுரக்க செய்த பொழுதினில் தான்
உணர்ந்தேன் !!!
மது புட்டியே,
உன் காதல் கூடா காதலென்று !!!!!

எழுதியவர் : (31-May-13, 8:45 pm)
சேர்த்தது : kavidhan
பார்வை : 128

மேலே