உன் சரணம் நான் பணிய....
ஏ மழையே! பூ மழையே!
வா மழையே! வான்வெளியே!
வான்வெளியே நீ இறங்க
உன் அழகில் நான் கிறங்க
உன் வனப்பை நான் ரசிக்க
என் ரசிப்பில் நீ லயிக்க
உன் படையென் மனம் ஜெயிக்க
உன் சரணம் நான் பணிய
உனைப்புகழ்ந்து கவி படைக்க
நீ மயங்கி பரிசளிக்க
உன் பரிசில் மனம் குளிர
அக்குளிரால் நான் மகிழ
நான் மகிழ நீ மகிழ
தினம் பொழிவாய் நீ எழிலே!