குழந்தை திருமணம்
புரியாத வயதில்
அறியாத மனிதனுடன் திருமணம்...........
துள்ளி திரிந்த
கால்களும் மெல்ல நடக்கின்றன
விரலி மெட்டி அணிந்தனால்.......
வெட்கம் இல்லாமல்
இருக்கும் வயதில் வெட்கத்தோடு
இருக்க வைக்கிறது அவளின் திருமணம்.........
தலை நிமிர்ந்து
நடக்கும் வயதில்
தலை குனிந்து நடக்க செய்கிறது
அவளின் தாலிகயிறு ............
அம்மாவிடம் கதை கேட்கும்
வயதில் கதை சொல்கிறாள்
தன் குழந்தைக்கு அவள் அம்மாவாக......
தொட்டில் கட்டி விளையாடும் வயதில்
தொட்டி கட்டி தாலாட்டுகிறாள்
தன் குழந்தையை........
பல்லாங்குழி விளையாடும் வயதில்
அவள் வாழ்க்கை
பாளுன்குளியில் விழுந்தது.......
இவள் சொந்தத்தை அறியாத அவள்
ஆயிரம் சொந்தத்தை அறிகிறாள்
அவளின் திருமணம் மூலம்......
கண்ணை கட்டி விளையாடும் வயதில்
இவள் வாழ்க்கை கண்கட்டி விட்டது.......
சத்தமாக சிரிக்கும் வயதில்
சத்தம் மில்லாமல் அழுகிறாள்
திருமணம் வேண்டாம் என்று.......
........ இது என் கவிதை இல்லை குழந்தையின் வாழ்க்கை..............
........................... மு.விக்னேஷ் பாபு ...........