தமிழக மக்கள் தமிழ் பேசுவதற்கு முக்கிய காரணமே கலிஞர் தான் - தயாநிதி மாறன்...!

தமிழ் மொழியை காப்பாற்ற என்னையே அர்ப்பணிப்பேன் - கலீஞர் பிறந்த நாள் விழா பேச்சு...!

திமுக தலைவரின் 90 - வது பிறந்த நாள் விழாவில் 90 கவிஞர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்..அந்த வாழ்த்துரைக்கு ஏற்புரை ஆற்றிய கலைஞர் தான் இவ்வாறு செப்பினார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் வாழ்கையில் கஷ்டங்களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துயரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். பெரியார் அண்ணா மற்றும் பல்வேறு கவிஞர்கள் ஊட்டிய உணர்வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய்தால் தமிழையும், தமிழர்களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

( கல்வி, கல்லு, மணலு, தண்ணீர், காற்று என்று அனைத்தையும் காசாக்கிய பெருமையும், தமிழ் மக்களுக்கு எதிரான பத்துக்கும் மேலான அணுமின் நிலையம், மீதேன் கியாஸ், நியுட்ரினோ, வட ஆற்காடு மாவட்டத்தில் மலைகளை உடைத்து தோரியம், ராணுவ பயிற்சி முகாம், சேது சமுத்திர திட்டம், காவிரியில் தண்ணீர் வந்தால் மணல் வியாபாரம் செய்ய முடியாது எனவே நிரந்தரமாக காவிரியை மூட வைத்தல், தமிழக மக்களை இருளில் முக்கி சங்க காலத்துக்கே அழைத்துச் சென்றது..என்று நீளும் பட்டியல் ஏராளம் ஏராளம்...! இதற்குப் பிறகும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்கிறார்...)

தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகிறேன். இப்பொழுது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பொதுவாழ்க்கையில் அவையெல்லாம் ஒரு தூசிகள் தான்.

( குடும்ப பிரச்னை, கட்சியில் யாருக்கு அதிகாரம் வழங்குவது குறித்த பிரச்னை, சகோதர சண்டைகள், மகள் மீதான ஊழல் வழக்குகள், போதாக்குறைக்கு டு ஜி வழக்கில் அரசு சாட்சியாக மனைவியையும் சேர்த்துள்ளார்கள் படுபாவிகள்...)

ஏன் உணர்வையும் வலியையும் பெரிதாக்கும் அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர்களுக்கு கடமை உள்ளது. நம்காலத்தில் தமிழுக்கு தீங்கு வந்து அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தை போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமிழுக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மன நிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண்டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது.

நம் வாழ்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டில்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழி தகுதியை அளித்ததுடன், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ' சோனியாகாந்தி' எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

செம்மொழி தமிழை காப்பாற்றவும், உலகளவில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடுபட வேண்டும். தமிழ் செம்மொழி நிலைநாட்ட அர்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி, செம்மொழி தகுதியை இழந்துவிடாமல் காப்பாற்ற என்னை அர்ப்பனிப்பதுடன், வாதாடவும், போராடவும் செய்வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்முடைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வை பங்கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப்பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார் கலைஞர் அவர்கள்.

தமிழுக்கு செம்மொழி வாங்கப் போய் நேற்று மூக்கால் பேசும் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள்...அதுதான் ' எண்ட அம்மை பகவதிக்கு ' இந்தியாவில் இருக்கும்அணைத்து மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து கொடுத்துவிட்டு தமிழுக்கும் கொடுத்துள்ளார்கள்...
அன்னை சோனியா கட்சியினர்...)

வாழ்த்தவும் விரும்பவில்லை...வணங்கவும் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள் லட்சக்கணக்கில் உயிர்களை காவு கொடுத்தவர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (3-Jun-13, 3:47 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 110

மேலே