நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் உண்டா .......

************************************************************************
கேள்வி பதில் தளத்தில் பதிந்தது இங்கும் அதனை வைக்கிறேன் மறைந்து விட கூடாதே என்பதால்
************************************************************************

இன்று ஹிந்து மதத்தை எதிர்பவர்கள் எல்லோருமே தன்னை பெரியார் போலவே பாவிக்கின்றனர் பெரியார் செய்தது ஒரு புரட்சி அது அந்த கால கட்டத்துக்கு தேவையானது இதில் எனக்கு சந்தேகமில்லை ஆனால் அந்த கேள்விகள் இன்னும் பிடித்து தன்னால் சிந்திக்க பட்டது போலவே காட்டி கொள்ளும் போக்குடயவர்களுக்கு மட்டும் இந்த கேள்விகள் .........

ஹிந்து மதத்தை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் .........

1.ஹிந்து மதத்தை பலிக்கும் துணிச்சல் நீங்கள் ஹிந்துவாக இருப்பதால் மட்டுமே , இதற்கான உங்கள் பதில் ?

2. மத ஒழிப்பு என்று சொன்னால் எத்தனை மதங்கள் இருக்கிறது அதனை குறித்தும் விமர்சிக்க முடியுமா, தைரியம் உண்டா ?

3. ஹிந்து மதத்தை குடைவது மட்டுமே நோக்கம் என்றால் ஏனைய மதங்களை நீங்கள் ஏற்கீறீர்களா அதனால் பிரிவினை வராது என்பதை உங்களால் நிருபிக்க இயலுமா ?

4. ஆர்யர் -திராவிடர் என்பது உங்கள் பிரச்சனை என்றால் அதனை தீர்க்க ஹிந்து மதத்தை அதன் இதிகாசங்களை தீண்டுவதுதான் நீங்கள் அறிந்த பகுத்தறிவா ?

5. இன்று பல ஏழைகளின் துடிப்பு அல்லது நம்பிக்கை கடவுள்தான் அவர்களின் பசியை தீர்த்தால் அன்றி பகுத்தறிவை ஊட்ட இயலாது அப்படியிருக்க இதிகாசங்கள் தேவையில்லை என்பது ஏழைகளின் நம்பிக்கையை குலைப்பது ஆகாதா ?

6. கண்மூடி வழக்கம் மண் மூடி போக சொன்னவரும் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தை சார்ந்தவர்தான் அவரையும் உங்களால் எதிர்க்க முடியுமா காரணம் அவரும் திருவாசகத்தை கற்று தேர்ந்தவர்,சிதம்பர தரிசன செய்தவர்தான் ?

7.பாரதி இயற்றிய பாஞ்சாலி சபதத்தின் நோக்கம் ?கண்ணன் கவிதைகளின் நோக்கம் ?இதனை உங்களால் விமர்சிக்க முடியுமா ?(விடுதலை இந்தியா என்று மொட்டையாக முடிக்க வேண்டாம் )

8. ரிக் ,யஜூர் ,சாம, அதர்வண ,பகவத்கீதை, ராமாயணம், திருவாசகம் ,கந்தபுராணம் ,எனக் கணக்கில் அடங்கா அனைத்தையும் படிப்பதற்கு இந்த வாழ்நாள் போதாது அப்படியிருக்க ஹிந்து மதத்தை விமர்சிப்பது நுனிப்புல் மேய்ந்த கதைதானே இதனை ஒப்புகொள்கிறீர்களா ?

9.இழந்த பல கலைகள் பகுத்தறிவால் உண்டானதா அல்லது பரமாத்மாவின் அர்பணிப்பில் உண்டானதா ?அப்படியெனில் கதை ,இலக்கியம், கவிதை,சிற்பகலை ,நாட்டியம் என்று அனைத்தும் பகுத்தறிவில் உண்டாகிவிடும் என்பதை உங்களால் நிரூபிக்க இயலுமா ?

10. மத ஒழிப்பாளர் என்றால் அணைத்து மதத்தயும் அல்லவா ஒழிக்க வேண்டும் மாறாக ஒரு மதத்தை ஒழிக்க நினைப்பதும் பிரிவினைதானே பிரிவினையை உண்டு செய்யும்தானே? அப்படி அனைத்து மதத்தையும் உங்களால் ஒட்டுமொத்தமாக காலி செய்திடும் வழிகள் உண்டா ?


நான் நீங்கள் எண்ணுவது போல் ஏதோ ஒரு ஹிந்து அமைப்பை சேர்ந்தவன் அல்ல நான் சாதாரண ஆள் .........எதிர்ப்பது என்று முடிவு செய்து விட்டால் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் அதுதான் சரியான எதிர்ப்பு அதை விடுத்து ஒன்றை மட்டுமே எத்ரிப்பது தவறு இதுவும் பிரிவினையை உண்டு செய்யும் என்பதை புரிந்து கொள்ளவே இக்கேள்வி ......இது சாடல் குறித்து அல்ல சிந்திப்பது குறித்து ........ தயவு செய்து சிந்தியுங்கள் பிரிவினைவாதம் பல இருக்கிறது இந்தியாவிலும் உலகிலும் அதனையெல்லாம் குறித்து சிந்திக்கபடவே இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் .......எந்த ஒரு மத உணர்வையும் கொச்சை படுத்தாதீர்கள் முடிந்தால் அறிவோடு மதத்தை அணுகக்கற்று கொடுங்கள் ......அறிவால், எதிர்ப்பதை விட அணுகுவதுதான் முறையான வழி அதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வு மத பிரிவினையும் மறையும் காரணம் எல்லா மதங்களும் சொல்ல வரும் விஷயங்கள் ஒன்றுதான் பாவனைகளும் அதன் மொழிகளும் வேறு என்பதுதான் உண்மை .......மதத்தை வைத்து ஒருவர் பற்றையும் மற்றவர் பிரிவையும் அல்லது ஒழிப்பையும் உண்டு செய்வது நியாயமா ?
************************************************************************
சிந்திப்போம் !!!!!!!!!!!

அன்புடன்
கார்த்திக்

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (3-Jun-13, 3:53 pm)
பார்வை : 464

மேலே