தயவு செய்து சிரிக்க வேண்டாம்
கல்லூரியில் ஒரு நேர்முகக் காணல்.
ஆசிரியர்: நீ படிச்சு முடிச்சதும் என்ன பண்ண போற?
பையன் : கல்யாணம்
ஆசிரியர் : அது இல்ல, நீ என்ன ஆகப்போற?
பையன் : கணவன்
ஆசிரியன் : இல்லை. உனக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கணும்னு எதிர்பார்க்கிற ?
பையன் : மனைவி
ஆசிரியர் : இல்ல இல்ல, உன் பெற்றோருக்கு என்ன பண்ண போற....
பையன்: மருமகள் தேடுவேன்.
ஆசிரியர் : முட்டாள், உன் அப்பா உன்கிட்ட என்ன
எதிர்பார்க்குராரு ?
பையன் : பேரக் குழ்ந்தை ....
ஆசிரியர் : ஐயோ கடவுளே!! டேய், உன் வாழ்க்கையின் லட்சியம் என்ன?
பையன்: நாம் இருவர் நமக்கு இருவர்
ஆசிரியர்: டேய்ய்ய்... நீ இப்ப உதை வாங்கப் போற .. உங்க அப்பா என்ன தொழில் பண்ணுறாரு
பையன் : கல்யாண புரோக்கரா இருக்காரு......