இரவுகளின் நீட்சிமை

சுவற்றின் கூரையினில் ஒட்டியிருக்கும்
நட்சத்திரங்களைப் பார்த்தபடி
எனக்கு குளிர்காலம் மிகவும் பிடிக்கும் என்கிறாய்.
வியப்பினால் விழிகள் விரிவடைகின்றன எனக்கு
'ஒரு போர்வையினில் செல்ல அப்பாவைக்
கட்டிக் கொண்டு தூங்கலாம் அல்லவா'
என்கிறாய்.
அன்று நீட்சிமை கொண்டது எனக்கான இரவு