வாழ்க்கையும் தாள்களும்

நேற்றைய தினம் செய்தித்தாள்

இன்றைய தினம் குப்பைத்தாள்

நாளைய தினம் வெற்றுத்தாள்

வரும்நாட்கள் வினாத்தாள்கள்

வாழ்க்கையே ஒரு விடைத்தாள்

ஒழுங்காக

இனி வரும் வெற்றுத்தாள்களை கையில் பெற்று,

மனதில் கிடைக்கும் கேள்வித்தாள்களுக்கு

முழுமையாக எழுதப்படாத விடைத்தாள்களை
அளித்தால்

வாழ்க்கை மீண்டும் குப்பைத்தாளாக மாறிவிடும்

பிறகு அதை பிறர் செய்தித்தாளாக வாசிக்க வேண்டிவரும்



புன் சிரிப்பு உதட்டில் வருவது புரிகிறது.....

எழுதியவர் : மங்காத்தா (4-Jun-13, 5:06 pm)
சேர்த்தது : ஹா மங்காத்தா
பார்வை : 58

மேலே