மனதின் முடிவு..............?

சொல்லாத சோகம்
வார்த்தையில்அடங்காது நாளும்
மனதின் குமுறல் யார் கேட்க கூடும்
உதடு வரை வந்த வார்த்தை
தற்கொலை செய்து கொள்ள
அதையும் தின்று முடித்தேன்
ஜீரணிக்க மெல்ல .............

தனிமையில் சில நேரம்
சிந்திக்க கூடும் ஏன்? இது?எதற்கு? இப்படி? என்று
விடையில்லா விடுகதையாய்
தின்று விட்டு போகும் நம் நேரத்தையும்
முடிவெடுப்போம் இனி அவ்வாறு
வீணாய் சிந்திப்பதில்லை என
அப்போதும் தொடரும் நம் சிந்தனை ..........

யாரோ கூறும் ஆலோசனையும்
அரைகுறையாய் ஏற்கும் மனது
தனியே சொல்லும் அதன் ஆலோசனையை
அதையும் ஏற்றும் ஏற்காததுமாய்
முடிவுகள் முற்று பெறுகிறது
நம் அனுமதியின்றி
ஏதோ செய்தோம் என்றே
அறுதல் கொள்கிறோம் நமக்கு நாமே

என்றாவது செய்தோமா
மனதுக்கு பிடித்ததை
மன நிறைவோடு
என்று செய்கின்றமோ அன்று அடைவோம்
வாழ்வின் முழு வெற்றியை

எழுதியவர் : ருத்ரன் (4-Jun-13, 3:45 pm)
பார்வை : 113

மேலே