ஒரு காதல் க[வி]தை

வருடங்கள் பல
அவள் பின்னாலே பலர்
அலைந்ததுண்டு!-அதில்
நானும் இருந்ததுண்டு!

ஒரு தலையாய்....
நினைத்து நினைத்து
எனக்குள்ளே
காதலித்திருக்கிறேன்!
காரணம் புரியாமல்
வாழ்ந்தும் இருக்கிறேன்!

கட்டுக்கடங்காத
காளையாகியும் அவள்
கண்களால் நான்
கட்டுபட்டிருகிறேன்!

அவள் கடக்கும்போதெல்லாம்
என்னக்குள் ஒரு
நடுக்கம்!
காரணம்....
அவள் விழிதொடுக்கும்
காதல் நிலநடுக்கம்!

என் காதலை
சொல்ல நினைத்ததுண்டு!
காரணம் புரியாமல்
இருந்ததும் உண்டு!


காலங்கள் பல
கடந்தாலும் என்
காதலை ஒருநாள்
அவளிடம் சொல்ல
நேர்ந்தது!

தைரியம் கொண்டு அவளிடம்
உன்னை விரும்புகிறேன் என்றேன்!-அதற்கு
அவளோ

நீ
என்னை விரும்புவது
ஊருக்கே தெரியும்
எனக்கு மட்டும்
தெரியாமல் இருக்குமா! என்று
ஒரே வாசகமாய்
சொல்லி முடித்தாள்!

அந்த நொடியானது
எனக்குள்
நின்ற அலை மறுபடியும் கரைகடந்தது போல் தோன்றியது!
நின்ற பறவை மறுபடியும் பறந்தது போல்
தோன்றியது!
நின்ற மரம் மறுபடியும் அசைந்தது போல்
தோன்றியது!

எழுதியவர் : vedhagiri (8-Dec-10, 11:47 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 363

மேலே