பயணம்
தூர பயணங்களில்
வழி நெடுக உன் நினைவு
அருகில் இருபவரை நீயாக நினைத்து
கரை சேர்கிறேன் நான்.
முன்னும் பின்னும்
நூறு முறை பார்கிறேன்
நீ இருப்பாய் என
ஒரு சொட்டு கண்ணீர்
ஒவ்வொரு முறையும்
எட்டி பார்க்கிறது
உன் வருகைக்காக
நானும் அமர்கிறேன்
ஜன்னலோர இருக்கையில்
பின்னல் போகும் மரங்களிடம்
தூது அனுபிக்கொண்டு