எனது குறிப்பேட்டின் பக்கங்கள்... [10]
என் முன் வானமாய்
விரிந்து கிடப்பவளே !
நான் நிலவாய்
தேய்ந்து கொண்டிருப்பதாய்
எண்ணிவிடாதே !!
உனக்குள் நீலமாய்
நிஜமாய்
நிறைந்து கொண்டிருக்கின்றேன்
என்பதே உண்மையடி !!!
[22]
**************
முன்பெல்லாம்
உன்னை கனவில் காண்பதற்காய்
தூக்கத்தை விரும்பினேன்
இன்றும் விரும்புகின்றேன்...
உன் நினைவுகள் தாக்கும்
பகற்ப் பொழுதுகள்
வேண்டாம் என்பதற்கும்
உனது பிரிவின்
துக்கத்தை மறப்பதற்கும் !
[23]
**************
எனது இலக்கு
வானத்தை தொடுவதற்காகவும்
எனது கிளைகளின் தேடல்
உலகை அரவணைப்பதற்காகவும்
எனது பூக்களின் தூவல்
எல்லோரையும்
மகிழ்விப்பதற்காகவும்
எனது அன்பின் நிழல்
எல்லோரையும்
சுகப்படுத்துவதற்காகவும்
இருந்தபோதிலும்
எனது
உயிரின் வேர்கள்
சலனமற்று
ஊடுருவிக் கிடப்பது என்னவோ
நிலமாய்த் தாங்கும்
உனக்குள்தான் !!
[24]
*****************
[பக்கம் 11... தொடரும்]