போருக்குப் போகாத மகனும் அரசின் பார்வையால் ...

தனிமையோடு
மௌனமாய்ப்
பேசிக் கொண்டிருந்தது
தனித்துக் கிடந்த
தார்ச் சாலை !

இருள் அப்பிக் கிடந்த
பின்னிரவின்
வருகைக்குப் பின்னும் -

கைப் பையோடு
ரேஷன் பொருள் வாங்க
காலையில்
சிரிப்புடன்
சைக்கிளில் சென்ற
மகனைக் காணாத
தாய்க் கிழவி
வாசலில் அமர்ந்து
சாலையைப்
பார்த்துக் கொண்டு இருந்தாள்!

நடு வீட்டில்
நடுங்கியபடி
எரிந்துகொண்டு இருந்தது
அரைகுறைத் திரியுடன்
அரிக்கேன் விளக்கு !

எழுதியவர் : முத்து நாடன் (8-Jun-13, 12:27 am)
பார்வை : 73

மேலே