மொழி நம் விழி

மொழி நம் விழி
மாசடைந்து கண்ணீர் மல்கிய நிலையில்
தமிழர்களே துடைக்க ஆயத்தமாகுங்கள்
பார்வை பறிபோவதற்கு முன்னால்
சிகிச்சைக்கு கத்தியின் கூர்முனை கிழிப்பதற்கு முன்னே
இளைஞனே இமை திறந்து ஒளி பெறச்செய்
தமிழ் மெல்ல சாகும் என்றார்கள் இனி இந்த வாசகம்
நம் உச்சரிப்பில் சாக வேண்டும்
நன்றிகளுடன்
ஜா. சிக்கந்தர் பூட்டோ