தலைப்புச்செய்தி
![](https://eluthu.com/images/loading.gif)
மானமுள்ள கூட்டம் ஒன்று..
மாற்றம் ஒன்று வேண்டுமென்று...
சீற்றம் கொண்டு எழுந்தது...
மதம்பிடித்த ஒருவன்...
மறுமலர்ச்சி கேட்டவர்கள்
நன்றி கெட்ட கூட்டமென்று
தலைப்புச்செய்தியில் சொல்கிறான்...
மானம்கெட்ட கூட்டமொன்று...
அதை ஆதரித்து பேசி..
அறிக்கையும் விடுகிறது...
அடித்து பிடித்து ஆட்சி அமைத்து...
சிம்மாசனம் அமர்ந்த தலைவன்...
வேடிக்கை பார்க்கிறான்...
ஜனநாயகம் நேற்று..
செத்துப்போனதாய் சொன்னார்கள்...
மனித உணர்வும் அதனோடு..
மறித்து போனதை சொல்ல மறந்தார்கள்...