நீயும் என் கவிதையும்

கவிதைக்கு உயிர் உண்டு என்று தெரிந்தது,
உன்னை பற்றி நான் எழுதியபோது. . .
கவிதைக்கு சுவாசம் உண்டு என்று தெரிந்தது
அதை நீ வாசிக்கும்போது. . .
கவிதைக்கு உணர்வு உண்டு என்று தெரிந்தது
அதை நீ வாசித்து வியக்கும் போது. . .
கவிதைக்கு ஆசை உண்டு என்று தெரிந்தது
அதை நீ நினைக்கும் போது. . .
கவிதைக்கு கோபம் உண்டு என்று தெரிந்தது
அதை நீ மறுக்கும் போது. . .
இறுதியில் எனக்கு ஒன்று புரிந்தது
என் கவிதை எப்பொழுதும்
நீயே என்று ....

எழுதியவர் : கருணாநிதி .கா (10-Jun-13, 11:29 am)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 132

மேலே