எழுச்சிகள் பெறுவோம் - சி.எம்.ஜேசு
சண்டை என்று வரும்போது
மண்டையுடைத்து கொள்ளாமல்
சமாதானமேனும் எழுச்சிப் பெறுவோம்
வயிறுண்டு வாழாது
அறிவுண்டு வாழ்ந்து
அனைவரும் ஒன்றேனும்
எழுச்சியினைப் பெறுவோம்
உணர்வினை செயலினை
நல்லதென மாற்றி
நானிலம் நம்மைப் புகழும்
எழுச்சியினைப் பெறுவோம்
கலக்கங்கள் கலகங்கள்
நிகழாது கண்டு
ஊக்கங்கள் உருதுணைகள்
மனதினிலே பிறக்கும்
எழுச்சிகள் பெறுவோம்