முயன்று வாழ்வோம் - சி.எம்.ஜேசு

பேதை மனத்தால் பாதைகள் மாறி
போதை மயக்கத்தில் வீடிழந்து
போகும் வாழ்வை புதிதாக்கிட
முயன்று பார்ப்போமே - நாம்
முயன்று பார்ப்போமே
ஆசைகள் வாழ்வில் அலைகளாய் வந்து
எழுச்சிகள் இதயத்தில் என்றும் பிறந்து
முடியாத வாழ்வை முடிக்காமல் செல்ல
முயன்று பார்ப்போமே - நாம்
முயன்று பார்ப்போமே
உறவுகளைச் சுற்றி உதவிகள் கண்டு
உறுதுணையாகும் நண்பனைக் கொண்டு
நலம் தரும் வாழ்வின் வெற்றிக்கு சென்று
நம்மையே நாமே இகழாமல் புகழ்ந்து
வாழ்ந்து பார்ப்போமே - வாழ்வில்
முயன்று பார்ப்போமே