தோழி

களிப்புறவும் கவலை தீர்க்கவும்
கருணையோடு மனம் தேற்றவும்
கடவுளுக்கு பேச வராது எனவே
காட்டினாரோ உயிர்த் தோழி உன்னை....!!!

பெற்றவர்கள் போன பின்னும்
பெற்றதாயாய் நீ இருப்பாய்
கட்டியவன் கடிந்த நேரம் என்
கண்கலங்க நீ துடைப்பாய்......!!!

சிறுகதைகள் நிறைய பேசி - வாழ்வை
சிங்காரக் கவிதையாக்கி.....
சிந்தை தோட்டத்திலே
சிறப்புறவே நட் பூக்கள் வளர்த்து.....

வையகத்தை சொர்க்கமாக்கி
வசந்தத்தை சொந்தமாக்கி
வலம் வருகிறோம் மழலைகள் போல்....

தோழி....... என்

உயிரை எதிரில் காண்கின்றேன்
உன்னால் நானும் வாழ்கின்றேன்.....!

எழுதியவர் : ரஞ்சிதா (11-Jun-13, 10:44 am)
Tanglish : thozhi
பார்வை : 270

மேலே