தோழி பைரோஸ் பானுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்......!
பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல - மனம்
திறந்து நான் பறந்து வந்தேன்...நீங்கள்
மறந்து விட வாய்ப்பு இல்லை - நான்
சிறந்து வீசும் தென்றல் காற்று.....!
வெட்டுவதற்காய் கேக்கை
விண்ணிலே அனுப்பியிருக்கிறேன்.....அது
வெண்ணிலா என்றே - உங்கள்
விழிகளுக்குப் புலப்படட்டும்.....!
பொன்னிறப் பலூன்களை எல்லாம் - காலைப்
பொழுதிலேயே தயாரித்து விட்டேன்....
பரிதி ஒளி வீசி பறக்கும் முகில்கள் அவை
பெர்த் டே வாழ்த்துகையில் பெய்யும் சாரல் மழை...!!!
கூவும் குயிலோசையிலே ஹை
கூ............. என இன்னிசை வரும்.......
ஹேப்பி பெர்த் டே என எனக்கு
இப்படித்தான் சொல்ல வரும்.......!!!!
எண்ணங்களை அழகுறவே
எடுத்து நான் கோர்த்து வைத்து
பிறந்த நாள் பரிசாக அடுத்து நான் தருகிறேன்
அருகிலே பாருங்கள் அழகான பட்டாம் பூச்சிகள்...!!!!
வானவில்லே மெழுகு வர்த்தி
வந்த மின்னல் ஒளிச் சுடராம்....
வாய் ஊதும் ரோஜா மலராய்
வர்ணித்தேன் கனவினிலே.....
நண்பனே என்றொருமுறை
நலமுடனே எனை அழையுங்கள்....
நட்பு அது இனித்திருக்கும்
நானும் இனிப்பு கொடுத்திருப்பேன்
பைரோஸ் பானு என்றால்
படித்தேன் வெற்றிப் பெண் என்று...!
திரும்பவும் படித்து
திருத்தினேன் வெற்றி நிலவென்று..!
அலங்கரிக்கப் பிறந்தது
ஆகாயத்தில் அந்த வெண்ணிலா......!
ஆனந்திக்கப் பிறந்தது
அவனியிலே இந்த வெற்றி நிலா.....!
அல்லாவின் நல்லாசியோடு
எல்லா வளமும் நீங்கள் பெற்று
பல்லாண்டு நீடுழி வாழ்க என - நிகர்
இல்லாத தமிழில் இனிதாக சொல்கிறேன் தோழி.....
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அன்புடன் ஹரி