நண்பனே நீ எனக்கு வேண்டும் - சி.எம்.ஜேசு

நண்பனே நீ எனக்கு நான்
உள்ளவரை வேண்டும்

உலகின் எல்லைவரைச் சென்று
உன்னோடு உலகம் சுற்ற வேண்டும்

கவலைகள் மறைய மனதை
மகிழ்விப்பவன் நீ ஒருவன் தான்

என் துக்கத்திலும் துயரிலும்
ஆறுதலை நீ தருகிறாய்

உன் நலம் மறந்து என் நலம் கேட்கிறாய்
உன் துயர் மறைத்து என் துயர் தீர்க்கிறாய்

உதவிட உன்னைப் போல் யாருண்டு
நீ இல்லாத இடங்கள் உலகில் எங்குண்டு

பள்ளி நண்பனானாய்
கல்லூரித் தோழனானாய்
மணமகனின் நண்பனானாய்
வாழ்வியல் வழி காட்டியாய் - நீ
எனக்கு வேண்டும்
என் உயிர் உள்ளவரை

எழுதியவர் : சி.எம் .ஜேசு (10-Jun-13, 11:47 pm)
பார்வை : 362

மேலே