பகுத்தறிவு-ஹைக்கூ கவிதைகள்

பெரியார்-
கடவுள் இல்லை இல்லவே இல்லை
என்று சொல்பவர்களின் கடவுள்

உண்டியல்-
கடவுள் இருக்கின்றாரோ இல்லையோ
அவர் திருவோடு மட்டும் ஹவுஸ் புல்

சாதி-
அன்று உயர்ந்தோர் உருவாக்கிய சதி
இன்று அவர்களையே எரிக்கும் தீ.

மந்திரம்-
பாவிகள் பேசும் தாய்மொழி
அப்பாவிகளை ஏய்க்கும் தந்திர வழி.

சாம்பிராணி-
மூளையில்லாதவன் பெயர் மடச்சாம்பிராணி
அதை ஏன் புகைமூட்டுகிறார் கடவுளுக்கு...?

ஊதுபத்தி-
கடவுள் பிடிக்கும் வாசனைப் புகைப்பான்கள்
கடவுளுக்கு வராதோ புற்று நோய்...?

மதம்-
மதம் பிடித்து மனிதர்களைக் கொன்றது யானை
எந்த மதம் என்று எவருக்கும் தெரியவில்லை...?

பகுத்தறிவுவாதி-
வயிற்றால் சிந்திப்பவன் மதவாதி
தலையால் சிந்திப்பவன் பகுத்தறிவுவாதி

மதவாதிகள்-
வியாதிகளுக்குப் பல பெயர்கள்l.. காலரா,டைபாய்ட்,
மதவியாதிகளுக்கும் பலபெயர்கள்

பேய்-
நடக்கும் நாடகத்தில் கடவுள் ஹீரோ
பேய்கள்,சாத்தான்கள் பெரிய வில்லன்கள்

மூடநம்பிக்கை-
தன்னம்பிக்கை இல்லாதவனுக்குக் நம்பிக்கை
நம்பிக்கை உள்ளவனையே அழிக்கும் நம்பிக்கை

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (11-Jun-13, 8:27 pm)
பார்வை : 1344

மேலே