தவிப்பு
அன்று அதிகாலையில் இருந்தே ஜனனிக்கு மிக
கவலையாக இருந்தது .ஏனெனில் இன்னும் 2 நாள்களில் விடுதிக்கு செல்ல வேண்டும் .
தன் காலருகில் உரசி நின்ற தன் செல்லப் பூனைக்
குட்டியை கண்ணீர் மல்க பார்த்தாள்.
ஏனெனில் இந்த மூன்றரை வருடங்களாய் அவள் தன் மீனு குட்டியை விட்டு பிரிந்ததில்லை .
பள்ளி செல்லும் வரை கூடவே இருக்கும் மீனு மாலை ஜனனி குரல் கேட்டதும் எங்கிருந்தாலும் ஓடி வரும் .இரவு வெகு நேரம் வரை கண் விழித்து படிக்கும் ஜனனிக்கு துணையாக இருக்கும்.
விரைவிலேயே அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கமாகிப் போனது.பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரமெல்லாம் மீனுவோடுதான் ஜனனிக்கு.
அப்படி இருந்த மீனுவை இப்போது பிரிய வேண்டி
இருக்கிறது கல்லூரி செல்வதற்காக .
ஜனனியின் மன வேதனை அதிகமாகிக் கொண்டே போனது நாள் நெருங்க நெருங்க.
கல்லூரி கனவுகளை விட மீனுவின் நினைவே
நினைவில் நின்றது.
பிரிவை நினைத்து வருந்திய மனம் தான் இல்லாமல் மீனு கஷ்டப்படுவதை விட
தன் கண் முன்னேயே நல்லபடியாக இறந்து விடுவது நல்லது என்று எண்ணியது .
உடனே' ஹைய்யோ!நம் மீனு இறப்பதா 'என்று மனம் அழுதது .வீட்டில் உள்ள மற்றவர்களால் மீனுவை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்ற போது மனம் வருந்தியது.
அடுத்த நாள் பக்கத்துக்கு வீட்டு நாய்களுடன் சண்டை போட்டு மீனுவிற்கு உடல்நிலை சரி இல்லாமல் டாக்டரின் சிகிச்சைக்கும் பலனில்லாமல் மீனு பிரிந்து விட்டது.
ஜனனிக்கு உயிரே தொலைந்தது போலிருந்தது.
தன்னால் தான் மீனுவிற்கு இப்படி என்று.ஆனாலும் ஏனோ மனதினுள் நிம்மதி.
இன்று பல வருடங்கள் கடந்து விட்டன. ஜனனிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.ஆனாலும் வருடந்தோறும் தன் முதல் குழந்தைன்யின் பிரிவை நினைத்து வாடுகிறது ஜனனியின் மனம் .
பெற்றால்தான் பிள்ளையா!