பெண்ணே...

பூவின் கருவறையில் பிறந்து
தேனீ தாகம் தீர்த்தவள் நீயோ?
பெண்ணே
காற்றோடு கலந்த கற்பனையாய்
எனக்குள் புகுந்தவள் நீயோ?

எண்ணத்தால் உன்னை ரசித்தேன்
பெண்ணே
என் எண்ணமெல்லாம் நீயோ?
வண்ணக்கனவுகள் எனக்குள் வர
காரணம் எல்லாம் நீயோ ?

நான் என்றச் சொல்லை
உனக்குள் புதைத்தேன்
பெண்ணே
நீ இல்லை என்றால் இவ்வுலகில்
நானும் உயிர் உள்ள சிலையோ?

எனக்காக வாழ்பவளே
பெண்ணே
என் உயிருக்காக போராடும்
என் சுவாசக்காற்றும் நீயோ ???

எழுதியவர் : விக்கி (12-Jun-13, 10:57 am)
Tanglish : penne
பார்வை : 130

மேலே