காதல் + எலி = காதலி (ஒடி விடும்)

என் வாழ்வில் ,

அவளை மலர் என்றேன்
சரி தான் !
வாடி உதிர்ந்து விட்டாள்.

அவளை கடல் அலை என்றேன்
சரி தான் !
வந்து சென்று விட்டாள்.

அவளை நிலவு என்றேன்
சரி தான் !
வந்து மறைந்து விட்டாள்.

அவளை மழை என்றேன்
சரி தான் !
வந்து நின்று விட்டாள்.

அவளை கானல் நீர் என்றேன்
சரி தான்
இருந்தால் இப்போது இல்லை


இவள் தான் காதலியா?

எழுதியவர் : டெல்சி பிரபு (12-Jun-13, 3:47 pm)
சேர்த்தது : டெல்சி
பார்வை : 164

மேலே