எய்யப்பட்ட அம்பு

காதல் கவிதையை ...
கண்ணீரால் ..
எழுதாமல் இருக்க ..
முயற்சிக்கிறேன் ..
முடியவில்லை
கஸல் -கண்ணீரால்
எழுதும் கவிதை தான் ...

நீ எனக்கு வலியாக
மாறிவிடு -அப்போதுதான்
நான் உன்னை விட்டு
பிரியமாட்டேன்

காதல் உன்மீது
எய்யப்பட்ட அம்பு
எய்தவன் யாரோ இருக்க ..
என்னை ஏன் நோகிறாய் ..??

கஸல் ;138

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (12-Jun-13, 3:29 pm)
பார்வை : 123

மேலே