கூத்து கலைஞகள்

வாசனை திரவியம் பூசி கொள்கிறாய்
உன் வலிகள் அடுத்தவருக்கு
தென்பட கூடாதென்று !
உன் குடும்பத்திற்கு உணவளிக்க
நீ கோமாளி ஆகினாயோ !
நகரத்தின் இரவு குற்றங்கள்
உன்னையும் இம்சிக்குமே?
கானல் நீர் தான் வாழ்க்கை
நீ முன்னரே அறிந்தாயோ !
இச்சை கொண்ட எச்சை கூட்டம்
உன் நிலை அறியாது தொடர்கிறதே
நீயும் எம் இனம் தான்
என்பதை எப்போது உணர்வாரோ !

எழுதியவர் : செல்வம் velchamy (14-Jun-13, 1:54 pm)
சேர்த்தது : selvam velchamy
பார்வை : 91

மேலே