உனக்கெனவே நான் வாழ்கிறேன்

உலக அழகிகள் ஓன்று கூடி
கண்முன்னே நின்றாள் கூட
நான் பேரழகியாய் உணர்வது
உன்னை மட்டும் தானே
அதற்காக வேணும்

எல்லோருக்கும் நிழல் என்பது
ஓன்று தான்
ஆனால் எனக்கு மட்டும் நிழல்
இரண்டு
உன் நிழல் கூட என்னை விட்டு
பிரியாமல் இருக்கிறதே
அதற்காக வேணும்

குழந்தையை தோளில் சுமப்பது
சுகம் என்று தெரியும்
நான் அதிகம் குழந்தையாய் சுமப்பது
உன் கைகளை தான்
அந்த கை (கைகள்) குழந்தையை
கடைசி வரை சுமக்க வேண்டுமே
அதற்காக வேணும்

வறுமைக்கு வாழ்க்கை பட்ட
என்னையும்
ஏழ்மைக்கு பழக்க பட்ட
உன்னையும்
ஓன்று சேர்த்த விதியை
வெல்ல வேண்டுமே
அல்லது
விதியை கொல்ல வேண்டுமே
அதற்காக வேணும்

ஆடம்பரத்தையும்,
அணிகலனையும்,
சொகுசு வாழ்க்கையையும்,
ஆசை படும் பெண்கள்
மத்தியில்
என் நிலை தெரிந்தும்
கட்டி கொண்டாயே
அந்த பெருந்தன்மைக்கேனும்

பணத்திற்காக
தன்மானத்தையும்,
உடலையும்,
மனித தன்மையையும்,
விற்று
வாழ்க்கையோட்டும்
கூட்டத்திற்கு மத்தியில்

சில்லைறை பொருட்களை
விற்று
வாழ்க்கை நடத்தும்
நம் வாழ்க்கையின்
பெருமை பெரியதே
அந்த பெருமைக்கேனும்

கள்ள காதல்
கரைபுரண்டோடும் உலகில்
கொலை கொள்ளை
அதிகமான நிலையில்
கணவன் மனைவி உறவிற்கும்
உழைத்து வாழும் முறைக்கும்
ஒரு உதாரணமாய்
நீயும் நானும் வாழ்கிறோமே
அதற்காகவேனும்

பார்வை இருந்தும்
சிலர் குருடர்களாய்

பெண்களின் மாராப்பு விலகலையும்
பெண்கள் குளிக்கும் காட்சியை
ஒளிந்திருந்தும்
யாரோ யாரோ ஓன்று சேரும்
அந்தரங்க நிகழ்வை
ஆபாச படமென்ற பேரில்
ரசித்து பார்ப்பவர்களின்
மத்தியில்


என்னை குருடனாக்கி
படைத்த கடவுளின்
பெருந்தன்மையைக்காகவும்
எந்த தவறான காட்சியையும்
கண்ணெடுத்து பார்க்காத
மனிதர் சிலரில்
நானும் ஒருவன் என்ற
பெருமிதத்திர்க்காகவும்

இவையாவிர்க்கும்
வழித்துணையாய்
என் உயிர் துணையாய்
நின்று

எனக்கு வாழ்க்கை கொடுத்த
உன் புகழை
நாளெல்லாம் பாடி பாடி
பரவசம் அடைய வேண்டுமே
அதற்காக வேணும்

"உனக்கெனவே நான் வாழ்கிறேன்"

என் பார்வையற்ற ஒளி விளக்கே

"உனக்கெனவே நான் வாழ்கிறேன்"

எழுதியவர் : எழுத்தாளன் சஷி (14-Jun-13, 8:24 pm)
பார்வை : 127

மேலே