கண்ணீரின் வேதனை
இதயம் அழும்போது
இதழிலிருந்து வார்த்தைகள் வரா...
கண்களின் ஓரம் சிறு
கண்ணீர் துளி மட்டுமே கசியும்...-
உன் உள்ளதை புரிந்து கொள்ளும்
உண்மையான உள்ளம் இருந்தால் - அக்
கண்ணீர் கூட பேசும் - உன்
உள்ளத்தில் இருப்பதை
உரைத்திடும் வார்த்தையாக...