உன் நினைவு என் இதயத்தில்

உன் நினைவுகளை நன் சுமந்திடவே
நீ விலகி நிற்கிறாய்................!!!
கனவுகளை நீ கண்டதினாலே
உன்னை நீ வாட்டி வதைக்கிறாய்.....!!

நிஜங்களை நீ உனக்குள்ளே
ஏற்க மறுக்கிறாய் - புது
ஜாலங்கள் செய்து என்னை
மயக்க பார்க்கிறாய்.....

உனது கை விரல்கள் கூட சொல்லும்
நமது சொந்தம் என்னவென்று......!
அதில் அணிந்த கை கடிகாரமோ துடிக்கும்
நான் வாடுவதை கண்டு ......!!

தோல் சாய ஏங்கினேன்
என் தோழன் நீ என்று.....!!
புன்னகை பூவில் புதைந்தேன்
உன் அன்பு நெஞ்சம் கண்டு........!

அன்பே
அர்த்தங்கள் தேவை இல்லை
உன் அருகில் இருக்க...............
விலக்கங்கள் தேவை இல்லை
என்னை விளக்க பார்க்க ..........

உனது பார்வை போதும்
நான் பரவசம் அடைய..........
உனது இதயத்தில் சிறு
இடம் போதும்
நான் என்றும் வசிக்க..........

எழுதியவர் : ரேவதி (20-Jun-13, 3:06 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
பார்வை : 220

மேலே