என் காதல்
என் வாழ்வின்
மெதுவாய் அசையும்
நிமிடங்களின் ஆர்முடுக்கி
என் காதல்
மௌனங்களும் கதைபேசும்
மௌனமே பெரும் தவம் என்று
புரிவைத்தது
என் காதல்
தொலைவில் தெரியும்
நிலவைக்கூட
என் அருகில் இருப்பதாய்
உணரவைத்து
என் காதல்
நெஞ்சில் புலரும் உணர்வைக்கூட
நீ விரும்பும் கவிதையாய்
எழுதவைத்தது
என் காதல்
நிஜத்தில் தரையில்
நின்று கொண்டு
வானில் பறப்பதாய்
தோன்றவைத்தது
என் காதல்