சோகமானது உள்ளம்!
நீரில்லாத ஆற்று மணலையெல்லாம்
அள்ளி அள்ளி
இல்லம் செய்து
உள்ளம் மகிழ்ந்தான் மனிதன்!
அடாத மழைபெய்து
தன் உள்ளுக்குள் வந்த
வெள்ளத்தையெல்லாம்
பார்த்து தான் மட்டும்
திருப்தியடையாமல்
தன்னைவிட்டு பிரிந்து சென்ற
மணலையெல்லாம்
பார்க்க சென்றதோடு மட்டுமல்லாமல்
வீடுகளையெல்லாம் புரட்டிப்போட்டு
போன உறவுகளையெல்லாம் அழைத்துவந்தது ஆறு!
உறவை அழைத்துச் சென்றது வெள்ளம்!
அதனால் சோகமானது உள்ளம்!

