வரதட்சணை

சடங்கானவள்
சந்தைக்கு வருவாள் என
வரதட்சனை கடை
விரித்திருக்கும்
ஆண் மகனே.........!

நீ....
விலை பேசுவது
பெண்ணுக்கு அல்ல
உன் ஆண்மைக்கு
என்பதனை உணர்வாயா?

வெறும்
காசுக்கும் பொருளுக்கும்
விலை போகும்
உன் ஆண்மை
என்ன அவ்வளவு
மலிவு தரமா?

வரதட்சனை வாங்கி
குடும்ப நடத்த தயாராகும்
உனக்கு....
மனைவியை விட
மரணமே மேல்....

எழுதியவர் : சிவானந்தம் (22-Jun-13, 8:53 am)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : varathatchanai
பார்வை : 102

மேலே