சிங்கள கீதமல்ல இது ஈழ தமிழ் தேசிய கீதம்
முற்றும் சூழ் அலைகடல்
முடிவடையா பெரும் ஓசை
குறைவில்லா தமிழ் எனவே
கொடி நிமிர்த்தும் பரிதிக்கும்
காடு திறந்து வளி மிதந்து
காத்து நிற்கும் உயிர் மூச்சில்
ஓங்கி நிற்கும் வெயிலுக்கும்
உரத்து சொல்லும் மழைக்கும் எம்
பொன்னுடல் வியர்வை பூத்து
போற்றி நிற்போம் ஈழ பூமி
எதிரிக்கும் தர்ம வழியில்
ஈழத்தில் அமர வைத்து
போதிக்கும் பொற்காலம் கல்வி
புதுமை நூல்கள் செய்வித்து
எம் பூமி சட்டங்கள் என்றும்
இந்த உலகத்திற்கே வழிகாட்டும்
போர் வெறியில் பூவைத்து நாம்
பொறுமையிலே அணு உலகை
அறிவியலின் அழிவினைக்கு
ஆற்றலில் மாற்றி வைப்போம்
பொருளாதார பெரும் வேகம்
புரிந்து செல்லும் இலக்கிலே
பசி கொடுமை ஏழ்மையெல்லாம்
பகுத்தறிவின் தாழ்மையெல்லாம்
இல்லாதொழிக்கும் ஈழத்தாயே நீ
என்றும் வாழ வாழ்த்துகின்றோம் !
ஈழ தாயே வாழ்கவே! வாழ்கவே !
எம் தமிழ் தாயே வாழ்கவே ! வாழ்கவே !
விடுதலை தாளில் என்றும் விழுந்து பணிந்து
வெற்றி வெற்றி நித்தம் வினைகளாய் எழுவோம் !