பட்டாம்பூச்சியின் பாடம்

அடிக்கும் காற்றில்
ஆடும் பூச்செடி.
கிளர்வில் குலுங்கும்
மலர்ந்த பூக்கள்.
குலுங்கும் பூவில்
அலுங்காமல் அமர்ந்து
தேனை உண்ணும்
பட்டாம்பூச்சி
என்னவோ சொல்கிறது
என்னிடம்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Jun-13, 2:12 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 80

சிறந்த கவிதைகள்

மேலே