மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பளிப்போம்
மண்ணில் பிறந்த அவரும் மனிதர்
மதிக்கபடவேண்டியவர்களில் அவரும் ஒருவர்
மனமும் உணர்வும் நிறைந்த அவரது
மனம் நோகாது என்றும் இருப்போம் .............
உன்னைப்போலவே உணர்வும் உண்டு
உன்னைப்போலவே மனமும் உண்டு
தன்மானமும் சமமாய் கொண்ட அவரை
தம்போல் நினைத்திருப்போம் ............
வெளியில் தெரியும் உடலை மறுத்து
உள்ளிருக்கும் மனம் பார்ப்போம்
உள்ளுனர்விர்க்கு மதிப்பளித்து
உயர்ந்த எண்ணம் மனதில் வளர்ப்போம் ...........
எவர்விரும்பி ஊனம் கேட்பார்
எவர்நாடி ஊனம் பார்ப்பார்
இயற்கைவழி துன்பமதனை
இயன்றவரை நாம் தடுப்போம் ..........
இயற்க்கை வழிவந்த துன்பம் அதை
செயற்கையாக பெரிதுபடுத்தாமல்
முடிந்தவரையில் ஊக்கமளிப்போம்
முன்னின்று உதவி செய்வோம் ..........
உடலளவில் இருக்கும் குறையது
ஊனமென்று அர்த்தமில்லை
மனதளவில் சிலர்கொள்ளும்
கொடுங்குணமே ஊனமாகும் .............
பிறர் மனதை புண்படுத்தும்
எண்ணம்கொண்ட மனிதர்களுக்கு
ஊனம்கூட பாடம்கொடுக்கும் ஓர்நாள்
அவர் வாழ்க்கையை உணர்வதற்கு ............
உருவத்தில் ஊனமில்லை
பார்வையில்தான் ஊனம் இருக்கு
கண்களால் பார்க்கும் பார்வையை விட்டு விட்டு
மனத்தால் பார்ப்போம் எவரையும் மனிதனாக ...........

