வழிகாட்டுவோம் விழியாய் இருப்போம்

படித்தவர்கள் இருக்கும் இங்கு
பாமரரும் இருக்கின்றார்
இயந்திர உலகம் வந்தபின்பும்
எழுத படிக்க தெரியாமல் .............

உண்மையிருக்கும் உழைப்பிருக்கும்
எழுத படிக்க தெரியாததால்
ஏமாற்றம்தான் இவர்கள் வாழ்வு
ஏளனம்தான் இவர்கள் சொத்து ............

தொடர்வறுமை துளைத்தெடுக்க
பள்ளிப்படிப்பை துளைத்தவர்கள்
கல்வியறிவு அற்றவர்களாய்
காட்சிகொடுக்கிறார்கள் சமுதாயத்தில் ..........

அரசாங்க பணிகளுக்கு
கல்வித்தகுதி காலிழுக்க
கூலிக்கே தத்தானார்கள்
கூனொடிந்து போனார்கள் ...........

முடிந்த உதவி நாம் செய்வோம்
உதவிக்கரம் கொடுத்திடுவோம்
கல்வியறிவு அற்றவர்களின்
கண்களை திறந்திடுவோம் ........

வெளியுலகம் கற்றுக்கொடுப்போம்
அவர்கள் விதியினை மாற்றிடுவோம்
அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றி
அவர்களின் வாரிசுகளையும் வாழவைப்போம் .......

காமராசு கண்டகனவு
பொய்யாகிபோகலாமோ
பட்டிதொட்டி எல்ல ஊருக்கும்
படையெடுப்போம் பாடமெடுக்க .............

ஊர்சுற்றும் படித்தவனால்
பயனில்லை சமுதாயத்திற்கு
உன்னால் முடியும் உதவிதனை
கல்வியால் செய்திடலாமே ............

நீ பெற்ற கல்வியதை
உன்னோடு அழியவிடாமல்
பார்போற்றும் புகழ்பெறவே
படிப்பளிப்போம் எவருக்கும் ............

இதுவரை போனகாலம் இன்றோடு மறந்திடுவோம்
நாளைவரும் நாள்முதலே
நாம்தெளிந்து பிறரை தெளிவிப்போம்
கல்வியென்னும் ஒளிகொண்டு ...........

வழிகாட்டும் மனிதர்களாய்
வாழ்ந்திடுவோம் இன்றுமுதல்
கல்விக்கண் திறந்துவைத்து
கடமையாற்றுவோம் நம் சமுதாயத்திற்காக !

எழுதியவர் : வினாயகமுருகன் (22-Jun-13, 2:19 pm)
பார்வை : 97

மேலே