வாழ்க்கை பயணம்

என் தகப்பனே,
பயணிக்க ஆசைப்படடேன்.
கையில் செலவுக்கு
காலத்தைக் கொடுத்தனுப்பினாய்.

ஆசைகளின் பாதையில்
வெகுதூரம் பயணித்து
காலத்தை செலவிட்டு
கண்டதெல்லாம் வாஙகிவிட்டேன்.

இப்பொழுது
மூட்டைகளின் பாரம்
மூச்சையழுத்துகிறது.
ஆசைகளின் மேல்
ஆசையற்றுப் போனது.

எல்லாம் தெரிந்தவனே,
என்னை அனுப்பிவைத்தவனே,
ஏன் சொல்லவில்லை முன்னமே
என் பயணம் தவறென்று?

மிச்சமிருக்கும் காலம் கொண்டு
மீளுவேனோ உன்னிடம்?

அனுப்பி வைத்தவன் நீயே
அழைத்துக் கொள்
மறுபடியும்.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Jun-13, 2:27 pm)
சேர்த்தது : L Swaminathan
பார்வை : 71

மேலே