வாழ்க்கை புரிந்தது
அது ஒரு சிறிய செடி
எவர் உதவியுமின்றி
தானே வளரும்
தளிர்ச்செடி.
என் கவனக்குறைவால்
ஒரிரவு
கால்பட்டுக் குலைந்து போனது.
மறுநாள் காலையில்
குற்றவுணர்வு மொய்க்க
சென்று பார்த்தேன்.
முக்காலும் துவண்டிருந்தும்
புதிதாய் பூத்திருந்தது.
வாழ்க்கை புரிந்தது எனக்கு.