இருள் வாழ்க்கை

அகங்கார இருள் சூழ்ந்த
அடர்காடு என் வாழ்க்கை.

வழிதவறும் புலன்கள்
ஆசைகளில் மூழ்கி மூழ்கி
மயங்கும் மனம்.

மின்மனி புத்தி
அதன் சிறுவெளிச்சத்தில்
வைராக்கியக் கோல் பற்றி
எப்படியாகிலும்
கடந்து விடவேண்டும்
இந்தக் காட்டை.

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (22-Jun-13, 2:42 pm)
Tanglish : irul vaazhkkai
பார்வை : 109

மேலே