உனக்காக வாழ்ந்திருந்தேன்

பசியில் அழுகிறேன் கல்லிப்பாலாவது தருவாயா ?

மடியில் தூங்க ஏங்கினேன் முள் படுக்கைதான் எனக்கானதா ?

துணையாய் இருப்பாய் என்றிருந்தேன் என் துணையாய் கண்ணீர் மட்டுமே நீ தந்தாய்

உன்னோடு என் வாழ்கை என்றிருந்தேன் , நீயோ " உன்னை வைத்து தான் என் வழக்கை " என்றிருந்தாய்

உறவென்று நம்பினேன் என் உயிரையே எடுத்துவிட்டாய்.

இறந்தும் உன் முகம் காண துடிக்கிறேன் என் தூய்மையை போற்றும் மனிதனாய்.

உன் கைகள் ஏந்த வேண்டும் உன்னவளின் சடலத்தை !

அன்றாவது நம்புவாயா நான் உனக்காக வாழ்ந்தது உண்மையென்று !

எழுதியவர் : (25-Jun-13, 11:19 pm)
சேர்த்தது : sakthy
பார்வை : 83

மேலே