மற்றுமொரு சூப்பர் ஸ்டார் எட்வர்ட் ஸ்னோடென்...?

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தோன்றினார் முதல் சூப்பர் ஸ்டார் அவர் தான் விக்கிலீக்ஸ் -ன் ஜூலியன் அசாங்கே....தற்பொழுது ப்ரிசம் ஆப்பிரேசன் வழியாக தோன்றியுள்ளார் இரண்டாவது சூப்பர் ஸ்டார் எட்வர்ட் ஸ்னோடென்....!

உலக நாடுகளின் இணைய பயன்பாடுகளை அமெரிக்க அரசு உளவு பார்த்து வரும் தகவல்களை அம்பலப்படுத்தினார் இந்த இரண்டாவது சூப்பர் ஸ்டார். வழக்கம் போல தங்களது குட்டு அம்பலப்பட்டு போனதால் அசாங்கே போல இவரையும் தேசத் துரோக முத்திரை குத்தியுள்ளது ஒபாமா அரசு..
நல்லவேளை இவர் மீது பொம்பள கேசை போடவில்லை...அதற்கு இவரைப்பற்றி மற்ற விசயங்களை சொல்ல மறுக்கிறது அமெரிக்க அரசு..

எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவை விட்டு தப்பி ஹாங்காங் சென்றார்...
அங்கிருந்து மாஸ்கோ வழியாக தென் அமெரிக்க நாடு ஒன்றுக்கு போக திட்டமிட்டு பயணம் செய்துள்ளார்...

அமெரிக்க அரசு ஹாங்காங் - ல் வைத்து கைது செய்ய திட்டமிட்டது...சீன அரசிடம் கெஞ்சியது முடியாது என்றவுடன் மிரட்டியது அதற்குள் அவர் ஹாங்காங் - ஐ விட்டு மாஸ்கோ சென்றவுடன் ரசியாவுடன் தனது கெஞ்சலை தொடர்ந்தது..அவர்களும் சொல்லிவைத்தார் போல, சீனா மாதிரியே செயல்படவும் அதாவது மறுக்கவும் எச்சரிக்கை செய்தது அமெரிக்க அரசு...

வழக்கம் போல ரசிய அரசு சட்ட பாயிண்டுகளை அள்ளி ஏறிய, அவர் விமானம் ஏறி சென்றுவிட்டார்....ரசிய அரசு எது மாதிரியான சட்ட பாயிண்டுகளை தூக்கிப் போட்டார்கள்...?

அவர் ரசியாவில் இரங்கி மறு விமானம் ஏறினார்..அவரிடம் முறையான பயணச் சீட்டு இருந்தது...மேலும் அவர் ரசியாவில் எந்த குற்றமும் செய்யவில்லை..நாங்கள் எப்படி கைது செய்ய முடியும் என்று கூறியது புதின் அரசு...!

இணையம் என்று சொன்னாலே உளவு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அமெரிக்க அரசு...ஏனென்றால் எவ்வளவு காலம் தான் நாங்கள் ஜனநாயக காவலர்கள்...பெண்கள் குழந்தைகளை பெரிதும் மதிப்பவர்கள்...உலகத்திலேயே எங்களை போல் ஒரு யோக்கியன் கிடையாது என்று கூற முடியும்...?

அமெரிக்க மக்களை உளவு பார்ப்பது...உலக நாடுகளை..உலக வர்த்தக தொடர்புகளை உளவு பார்ப்பது என்று தொடங்கி தனக்கு போட்டியாளனாக விரைவில் வர இருக்கும் சீனாவை உளவு பார்க்கும் பொழுது தான் எட்வர்ட் ஸ்னோடென் வெளியே தெரிந்தார்....

சீன அரசும் நமது சூப்பர் ஸ்டார் கைவசம் உள்ள ஆதரங்களை மின்னல் வேகத்தில் பதிவு செய்து விட்டு, மிக மிக பத்திரமாக தங்களின் உளவுத் துறையினரிடம் ஒப்படைத்து விட்டார்கள்..அவர்களும் மாஸ்கோ வரை சென்று அப்படியே எந்த நாட்டுக்கு போவதற்கு விரும்பினாரோ அங்கு வரை சென்று விட மாட்டார்களா என்ன..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (26-Jun-13, 5:18 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 96

சிறந்த கட்டுரைகள்

மேலே