வாழ்வை தேடிக்கொண்டிருக்காதே
தேய்ந்து கொண்டிருக்கும் நிலவில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
வளர்ந்து வரும்
வளர்பிரையை விட்டுவிட்டு!
திரும்பிக்கொண்டிருக்கும் அலையில்
தேடிக்கொண்டிருக்காதே
வாழ்வை..
மீண்டு வரும்
அலைகளை விட்டுவிட்டு!
கடந்துவிட்ட காலங்களில்
தேடிக்கொன்டிருக்காதே
வாழ்வை..
உன்னை எதிர்நோக்கும்
இனிய காலங்களை விட்டுவிட்டு.................!!!!!!!!!!!!