varathatchanai kodumai

பிறந்தவுடன்
மருத்துவருக்கு பிரம்ம தட்சணை !
மகளுக்கு கிடைத்தது ஆரோக்கியம்!
கல்வி கற்க
குருவிற்கு குரு தட்சணை!
மகளுக்கு கிடைத்தது கல்வி செல்வம்!
மணம் முடிக்கும் மகளுக்கு
கொடுக்கவில்லை வரதட்சணை !
மகளுக்கு கிடைத்ததோ !
மரணதட்சணை!
பெற்றோருக்கு இதனால் பெரும் பிரச்சனை!
சமுகமே !
மாற்றிக்கொள் !
வரதட்சணை!
வரும் மகள் கொண்டுவரவில்லை எனில்
வராத தட்சணை இல்லை எனில்
என்ன ?
வரும் மகளே உங்களுக்கு ஒரு
பெரும் தட்சணை அன்றோ!
உணர்வீர் !
மகனுக்கு உயிர் தட்சணை கொடுத்த
உங்களை போல் வரும்
மகளும் மகள் கொடுக்கப்போகும் உயிரும்
உயர்ந்ததென்று !