தமிழ் பேசும் தென்றலே - நீ மென்மையோ மென்மை

போஸ் கொடுத்தாள்
தலை சாய்த்தபடி

தமிழ் பெண்ணவள்
எனைப் பார்த்தபடி

என் கவிதைக்கு இனி
அடுத்த அடி

எடுத்துத் தருவாள்
அவள் சிரித்தபடி

உவமை அது மலருக்கு
உதடுகள் என்பேனே

உருவகமும் நிலவுக்கு
அவள் அழகு என்பேனே

எடுத்துக்காட்டாய் அவளை
எழில் பூஞ்சோலை என்பேனே

வேற்றுப் பொருள் வைப்பு அணி
விபரம் ஒன்றும் சொல்லாது....

ஏனெனில்

பிரபஞ்சத்தில் அவள் அழகுக்கு
ஈடாய் எதுவும் நில்லாது......!!!!

சொல் பொருள் பின் வரும் நிலை அணி
சொல்ல வேண்டும் நான் - பெண்ணே

கொஞ்சம் நீ திரும்பு.......!!!!!

அடடா மீண்டும்

அழகு

அழகு

இரண்டும் சேர்ந்து

பேரழகு......!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Jul-13, 6:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 116

மேலே