ஒரு இரவுத் துயிலில்

ஒரு இரவுத் துயிலில்
கனவொன்று கண்டேன்
பகல்வந்து துயில் கலைக்க
கனவைத் தொலைத்தேன்
வேண்டா வெறுப்பாய் கண்விழித்தேன்
மீண்டும் கண்ணை மூடித்துயின்றேன்
அவள் கனவில் தொடர்ந்து வந்தாள்
கனவில் வர
இரவென்றும் பகலென்றும்
அவள் வேற்றுமை பாராட்டுவதில்லை !

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-24, 9:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே